தமிழக எல்லையில் ஆந்திரா ஒப்பந்ததாரர்களின் அட்டகாசம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

தமிழக எல்லையில் சவுடு மண் திருடும் கும்பல் கண்டுகொள்ளாத அதிகாரிகள்;

Update: 2025-03-18 06:26 GMT
  • whatsapp icon
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தமிழக எல்லையில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்களை ஆந்திர மாநிலத்தவருக்கு சொந்தம் என உரிமை கொண்டாடி சவுடு மண்ணை திருடி அதை தமிழகத்திற்கே விற்கும் கும்பலின் செயல் தொடர்கிறது. இது குறித்து கிராம மக்கள் கேள்வி எழுப்பினால் காவல்துறையினரை கொண்டு மிரட்டியும் வருகின்றனர் விடிய விடிய சவுடு மண்ணை கடத்தி லோடு லோடாக வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் உதவியோடு கிருஷ்ணா நதி நீர் பூண்டி அணைக்குச் செல்லும் கால்வாயை சேதப்படுத்தியும் தொம்பரம்பேடு தாமரை குப்பம் கிராமப்புற சாலைகளை சிதிலமடையச் செய்து சட்டவிரோதமாக ஆந்திர மாநில ஒப்பந்ததாரர்கள் மூலம் மண் எடுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதனை கிருஷ்ணா கால்வாய் பராமரிப்பு செய்து வரும் பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளாததால் எதிர்காலத்தில் சென்னைக்குச் செல்லும் குடிநீர் பாதிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளது இதை மாவட்ட வருவாய்த் துறையினர் உரிய முறையில் தடுக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் இதில் தென்னிந்திய பசுமை தீர்ப்பாயம் தலையிட்டு கனிமவள கொலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Similar News