கன்னியாகுமரியில் இன்று கடையடைப்பு போராட்டம்

அனைத்து வியாபாரிகள் சார்பில்;

Update: 2025-03-18 06:33 GMT
கன்னியாகுமரியில் இன்று கடையடைப்பு போராட்டம்
  • whatsapp icon
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளில் ஏற்கனவே அமலில் இருப்பது போன்று மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 15 சதவீதம் வாடகை உயர்த்தி அதே நபருக்கு வழங்குவது போல் மீண்டும் கடைகளை வாடகைக்கு விட வேண்டும், பொது ஏலத்துக்கு விடக்கூடாது என பேருராட்சி நிர்வாகத்தை கேட்டும்,       மாவட்ட ஆட்சியர் தலைமையில் வணிகர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகத்தை கேட்டும், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் போது காந்தி மண்டபம் முன்பு இருந்த முக்கோண பூங்கா சீரமைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மாற்றப்பட்டது.      ஆனால் இந்த பூங்காவின் நுழைவு வாயில் தற்போது எங்கு இருக்கிறது என்று தெரியாத அளவுக்கு இருசக்கர வாகனங்களும் தள்ளு வண்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை அனுமதிக்க கூடாது என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை கன்னியாகுமரி நகர பகுதி முழுவதும் வணிகர்கள் சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்கம்  முழு கடையடைப்பு போராட்டம் காலை முதல் தொடங்கியது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

Similar News