
குமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் 70 வயது முதியவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் நின்ற பலாமரம் ஒன்று பட்டுப் போய் உள்ளது. அதை விற்க்க அவர் ஆட்களை தேடி உள்ளார். அப்போது ஒரு வாலிபர் ரூ. 3500 ரூபாய் தந்தால் முறித்து தருவதாக கூறியுள்ளார். இதற்கு முதியோர் ஒப்புக்கொண்டு மரம் முறிக்கப்பட்டது. பின்னர் வாலிபர் வாகன கூலியாக 850 ரூபாய் ஆகும் என்று வாலிபர் மீண்டும் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் முதியவர் ரூ. 500 கொடுத்துள்ளார். இந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து முதியவரின் வீட்டுக்கு வந்து பாக்கி பணம் கேட்ட வாலிபர் ஒரு பாட்டிலில் பாம்புடன் வந்து அந்த பாம்பை முதியவரின் வீட்டிற்குள் விட்டுள்ளார். முதியவர் பாம்பை வடிவ விரட்டியுள்ளார். மீண்டும் வாலிபர் பாம்பை பாட்டிலில் அடைத்து மிரட்டியதுடன், முதியவரை தாக்கியுள்ளார். இது குறித்து முதியவர் கருங்கல் போலீசருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்தபோது வாலிபர் பாம்பை பாட்டிலில் அடைத்து வித்தை காட்டிக்கொண்டு இருந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொண்டதால் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர்.