
குமரி மாவட்டம் மங்கலகுன்று என்ற இடத்தை சேர்ந்தவர் கார்த்திக் ( 32). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவர் சுமார் ஆறு மாதத்திற்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். பின்னர் இவருக்கு சற்று மனநிலை பாதிப்பு இருந்ததையடுத்து திருவனந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தற்போது கார்த்திக் அணஞ்சிக் கோடு பகுதியில் உள்ள அவரது சகோதரி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கார்த்திக்கை இரவு காணவில்லை. அவரை உறவினர்கள் தேடி வந்த நிலையில், நேற்று காலையில் அவர் சகோதரி வீட்டில் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் தூக்கு மாட்டி தொங்கி இறந்த விலையில் காணப்பட்டுள்ளார். இது குறித்து உறவினர்கள் கருங்கல் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் என்ன காரணத்திற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்? என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.