முன் விரோதமாக பல்லால் கடித்து, டூவீலரை கல்லால் தாக்கிய நபர்கள் இருவர் கைது
குமாரபாளையம் அருகே முன் விரோதமாக பல்லால் கடித்து, டூவீலரை கல்லால் தாக்கிய நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.;

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு பகுதியில் வசிப்பவர் கவுதம், 25. இவர் நேற்றுமுன்தினம் தனது விவசாய நிலத்திற்கு டூவீலரில் சென்ற போது, அங்கு எதிரில் வந்த சத்யா நகரை சேர்ந்த பரத், 27, பூபதிராஜா, 31, ஆகியோர், முன் விரோதம் காரணமாக, எதுக்கு எங்களை பார்த்து கிண்டல் செய்கிறாய்? என்று பரத், பற்களால் கழுத்தில் கடிக்க, பூபதிராஜா, கைகளால் தாக்கியும், மேலும், கவுதம் வந்த டூவீலரை, முன் பகுதியில் கல்லால் தாக்கி சேதப்படுத்தினர். மேலும், கல்லைக்காட்டி, என்றாவது ஒருநாள் கொல்லாமல் விட மாட்டோம், என்று மிரட்டி சென்றனர். காயமடைந்த கவுதம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து கவுதம், குமாரபாளையம் போலீசில் புகார் கொடுக்க, போலீசார் பரத், பூபதிராஜா ஆகிய இருவரை கைது செய்தனர்.