வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது

குமாரபாளையத்தில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற நபர்  கைது செய்யப்பட்டார்.;

Update: 2025-03-18 12:39 GMT
வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது
  • whatsapp icon
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வெளிமாநில லாட்டரி  விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ.க்கள்  பொன்னுசாமி, ராம்குமார், குணசேகரன்  உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அரசு மேல்நிலைப்பள்ளி சாலை, விநாயகர் கோவில் அருகே லாட்டரி விற்றது தெரியவந்தது. அந்த   பகுதிக்கு சென்ற  போலீசார், அங்கு விற்பனை செய்து கொண்டிருந்த, அம்மன் நகரை சேர்ந்த, சண்முகம், 59, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 300 ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Similar News