விழுப்புரத்தில் செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

செப்டிக் டேங்க் கழிவுகள் உள்ளிட்ட கழிவுநீர் எடுத்து வந்து ஊற்றிய லாரி;

Update: 2025-03-18 14:59 GMT
விழுப்புரத்தில் செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
  • whatsapp icon
விழுப்புரம், காகுப்பம் மெயின் ரோடு அருகே நேற்று செப்டிக் டேங்க் கழிவுகள் உள்ளிட்ட கழிவுநீர் எடுத்து வந்து ஊற்றிய லாரியை, பொது மக்கள் சிலர் தடுத்தபோது, அதன் ஓட்டுநர், அவர்களை மிரட்டி சென்றுள்ளார். இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், 'காகுப்பம் மெயின் ரோடில் உள்ள காலி இடங்கள், நிலப் பகுதியில், தினசரி டேங்கர் லாரிகளில் செப்டிங் டேங்க் கழிவு நீரை கொண்டு வந்து, பகல் நேரங்களிலேயே சிலர் ஊற்றி செல்கின்றனர். தினம் 10 லாரிகளுக்கு மேல் கொண்டு வந்து ஊற்றுவதால், அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.நில உரிமையாளர்களுக்கும், நகராட்சி அலுவலர்களுக்கும் இவர்கள் பணம் கொடுத்து விட்டு, தொடர்ச்சியாக இங்கு கழிவு நீரை கொட்டி வருகின்றனர்.திறந்த வெளி கழிப்பிடம் கூடாது என அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இப்படி மனித கழிவு கலந்த நீரை திறந்த வெளியில் கொட்டுவது தடுக்கப்பட வேண்டும். இது குறித்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, செப்டிங் டேங்க் கழிவுநீர் கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்' என்றனர்.

Similar News