வல்லத்தில் திமுக சார்பில் பொதுகூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கலந்துகொண்டார்

திமுக பொதுகூட்டத்தில் முஅமைச்சர் கலந்துகொண்டார்;

Update: 2025-03-18 15:01 GMT
வல்லத்தில் திமுக சார்பில் பொதுகூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கலந்துகொண்டார்
  • whatsapp icon
வல்லம் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் தென்புத்துாரில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.ஒன்றிய செயலாளர் துரை தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, கபிலன், புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர்.மகளிரணி ஒன்றிய அமைப்பாளர் கலைவாணி வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமைக் கழக பேச்சாளர் காவேரிப்பட்டிணம் இளையராஜா ஆகியோர் அரசின் சாதனைகளை விளக்கி பேசினர். தொடர்ந்து, பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், மாநில தலைமை தீர்மான குழு உறுப்பினர் சிவா, மாவட்ட அவைத்தலைவர் சேகர், வல்லம் ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் இளம்வழுதி, மணிமாறன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் அன்புசெழியன், ஒன்றிய நிர்வாகிகள் தமிழரசன், ராமகிருஷ்ணன், கண்ணன், அண்ணாதுரை, ராஜகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.

Similar News