கண்டாச்சிபுரம் அருகே சிலிண்டர் வெடித்து கூரை வீடு தீக்கிரை
சிலிண்டர் வெடித்து கூரை வீடு தீக்கிரை;

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே சிலிண்டர் வெடித்து கூரை வீடு தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்டாச்சிபுரம் அடுத்த மேல்வாலை புதுமனை பகுதியை சேர்ந்தவர் தேவரங்கம் லீமா(40) தம்பதியினர். இவர்கள் அப்பகுதியில் சிமெண்ட் வீடு கட்டுவதால் அருகில் உள்ள அவர்களுக்கு சொந்தமான கூரை வீட்டில் அனைத்து பொருட்களும் வைத்து வசித்து வந்தனர். இந்நிலையில் இரவு சமைத்து விட்டு லீமா, தேவரங்கம் வெளியே சென்றுள்ளனர். அப்போது கேஸ் அடுப்பை கவனகுறைவால் நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதில் கூரை வீட்டில் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் கூரை வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முற்பட்டபோது சிலிண்டர் வெடித்து மேலும் தீ பற்றி உள்ளது. தகவலறிந்த கண்டாச்சிபுரம் போலிசார் மற்றும் அன்னியூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் வீடு முழுமையாக எரிந்து வீட்டில் வைத்திருந்த டிவி, வீட்டு பத்திரம் மற்றும் பீரோ உள்ளிட்ட சுமார் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முழுவதுமாக சேதாமகியுள்ளது. இதில் வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கண்டாச்சிபுரம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.