குறைதீர் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன சக்கர நாற்காலி வழங்கல் 

நிவாரண உதவி;

Update: 2025-03-18 16:48 GMT
தஞ்சாவூரில், திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 625 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம்  வழங்கினர்.  அப்போது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த 7 மாற்றுத்திறனாளிகளுக்கு  தலா ரூ.1,05,000/- வீதம் ரூ.7,35,000 மதிப்பிலான மின்கலன் பொருத்தப்பட்ட மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளை   மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.  இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சங்கர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுப.கமலகண்ணன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News