அரங்கநாத பெருமாள் கோவிலில் பாலாலயம்

பாலாலயம்;

Update: 2025-03-19 04:12 GMT
வாணாபுரம் அடுத்த ஆதி திருவரங்கத்தில் வரலாற்று சிறப்பு மிக்க அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும், 31ம் தேதி காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை மூலவர், ரங்கநாயகி தாயார் மற்றும் கோதண்டராமர், லட்சுமணர் சீதாபிராட்டி சன்னதிகளுக்கு பாலாலயம் செய்யப்படுகிறது. இதனால் அன்றைய தினத்தில் இருந்து கும்பாபிேஷகம் நடக்கும் வரை, பக்தர்கள் மூலவர் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்ய முடியாது. மாறாக, கொடிமரத்திற்கு அருகில் உற்சவர் சுவாமிகளை மட்டும் தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News