ஆரோவில் அருகே கொலை முயற்சி வழக்கு வாலிபருக்கு குண்டாஸ்
கொலை முயற்சி வழக்கு வாலிபருக்கு குண்டாஸ்;

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், நாவற்குளம், வசந்தபுரம் பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் ரகு (எ) மாரியப்பன் (36). இவா் மீது கடந்த மாதம் 14-ஆம் தேதி ஆரோவில் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.இந்த நிலையில், விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் பரிந்துரைப்படி, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய மாரியப்பனை குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா்.இதையடுத்து, அவரை ஆரோவில் போலீஸாா் குண்டா் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்