தவெக நிர்வாகிகள் அறிமுகக்கூட்டம்
புதியபாதை புதிய செயல் திட்டம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் மாவட்ட கழக செயலாளர் சிவக்குமார் தொண்டர்களுக்கு அறிவுரை;

பெரம்பலூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் அறிமுகக்கூட்டம் தமிழக வெற்றிக் கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளை அண்மையில் அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தார். இந்நிலையில் தவெக புதிய நிர்வாகிகளுக்கான அறிமுக கூட்டம் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் கூட்டரங்கில் இன்று (மார்ச்-19)நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் சிவக்குமார் தொண்டர்கள் மத்தியில் நிர்வாகிகளை அறிமுகம் செய்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.