சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத் துறை சார்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் கண்காட்சி
சிறந்த கண்காட்சிப் படைப்புகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது முதல் பரிசு து. களத்தூர் அரசு உநி பள்ளி (ரூபாய் 10,000) மாணவர்களுக்கு வழங்கப்பட்டது;
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத் துறை சார்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் கண்காட்சி நிகழ்வு நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பெரம்பலூர் மாவட்டத்தில் 60 பள்ளிகளில் இருந்து 120 மாணவ மாணவிகள் மற்றும் 60 இருபால் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர். சிறுதானிய உணவு உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது என்றும். ஆற்றல் மேம்பாடு காண்பதற்காக சூரிய சக்தி காற்றாலை, நீர் மின்சாரம்,போன்ற புதுப்பிக்கத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும். கழிவு என்பது செல்வம் என்று உணர்ந்து மறுசுழற்சி செய்து மறு பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்வது பற்றியும். மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் எல்லா இயற்கை வள ஆதாரங்களுக்கும் பிளாஸ்டிக் நெகிழி பொருட்களை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும். காலநிலை மாற்றத்தால் நமக்கு ஏற்பட்டு வரும் தீமைகளை முறியடிக்க இயற்கையோடு இணைந்து வாழ்வது அவசியமும் அவசரமம் ஆகும் என்ற கருத்தை வலியுறுத்தினார். பல வகை கண்காட்சி பொருட்களை தயார் செய்து எடுத்து வந்து மாணவர் மாணவியர் பார்வையாளர்களுக்கு விளக்கிச் சொன்னார்கள். நிகழ்ச்சிக்கு வரவேற்புரை நிகழ்த்திய மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஆரா.கார்த்திக் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக அனைவரும் உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அறிமுக உரை நிகழ்த்திய வாய்ஸ் அறக்கட்டளை திட்ட இயக்குனர் மற்றும் லால்குடி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் அ. கிரிகோரி இந்த கண்காட்சி நிகழ்ச்சி இந்திய அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் சார்பாகவும் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலையை மாற்றுதுறை நிதி உதவியுடன் பள்ளி கல்வித்துறை பெரம்பலூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகம் வழிகாட்டுதலின்படி வாய்ஸ் அறக்கட்டளை நடத்துவதாக குறிப்பிட்டார். கண்காட்சி பொருட்களை பார்வையிட வந்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பெரம்பலூர் மாவட்டம் சுற்றுச்சூழல் பொறியாளர் சு.விஜயா பிரியா பார்வையிட்டு அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார். கண்காட்சியை பொருட்களை மதிப்பீடு செய்த எழுத்தாளர் முனைவர் லஷ்மி பிரியா அவர்களும், பெரம்பலூர் மாவட்டம் பசுமை தோழன் கிருஷ்ணர் தேவராஜ் கண்காட்சி பொருட்களை மதிப்பீடு செய்தார். மதிப்பீடு செய்து சிறந்த கண்காட்சிப் படைப்புகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது முதல் பரிசு து. களத்தூர் அரசு உநி பள்ளி (ரூபாய் 10,000) இரண்டாம் பரிசு மெளலானா பள்ளி (ரூபாய் 8000 ) மூன்றாம் பரிசு குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (ரூபாய் 7000 ) இரண்டு ஆறுதல் பரிசுகள் தேனூர் அரசு மேனிலைப் பள்ளி, நக்கசேலம் அரசு மேனிலைப் பள்ளி (தலா 5000 ரூபாய்) வழங்கப் பட்டது. பரிசு பெற்ற ஐந்து சிறப்பு படைப்புகளுக்கு ரொக்க பரிசு ரூபாய் 35000 ஆயிரம் வழங்கப்பட்டது. அனைத்துப் பள்ளிகளுக்கும் தலா 1000 ரூபாய் (60 x 1000 = 60000) வழங்கப்பட்டது. பசுமைகண்காட்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ் மற்றும் துணி பைகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திரு. ஹென்றி முருகன் எட்வர்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அரசு கலை கல்லூரி திருவெறும்பூர் கல்லூரி மாணவிகள் ஆறு நபர்கள் இந்நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு தந்தனர் . வாய்ஸ் அறக்கட்டளை சார்பாக திரு ஆர.பிரகாஷ் ராஜ், ஜோ. பிரகாஷ் குமார். மற்றும் டி.ரவி அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.