அரசு அனுமதியின்றி லாரியில் கிராவல் மண் திருடிய நபரை கைது
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி லாரியில் கிராவல் மண் திருடிய நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.;
அரசு அனுமதியின்றி லாரியில் கிராவல் மண் திருடிய நபரை கைது பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி லாரியில் கிராவல் மண் திருடிய நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு உட்கோட்டம் குன்னம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மணல் திருடுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி தனிப்படை காவல்துறையினர் அனுமதியின்றி கவுள்பாளையம் கிராமத்தில் டிப்பர் லாரியில் கிராவல் மண் ஏற்றிக்கொண்டு குன்னம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அர்ஜுன்(25) S/O பழனிமுத்து மாரியம்மன் கோவில் அருகே, கவுள்பாளையம் பெரம்பலூர் என்பவரை பிடித்து குன்னம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் மேற்படி நபரை கைது செய்து வழக்கு பதிவு செய்து எதிரியிடமிருந்து ரூபாய் 16000 மதிப்புள்ள 7.5 யுனிட் மணல் மற்றும் TN45 BR 7362- என்ற பதிவெண்கொண்ட லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்த குன்னம் காவல்நிலைய காவல்துறையினர் மேற்படி எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்..