பெண் கல்வியை வலியுறுத்தி பள்ளி மாணவிகள் பங்கேற்ற மனித சங்கிலி ஊர்வலம்.

ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்பதை வலியுறுத்தி ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி ஊர்வலம் சென்றனர்.;

Update: 2025-03-20 17:54 GMT
ஆரணி. ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்பதை வலியுறுத்தி ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலத்தை ஆரணி வட்டாட்சியர் கௌரி துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி தலைமை தாங்கினார். அனைவரையும் ஆசிரியை பவித்ரா வரவேற்றார். இதில் மாணவிகள் பெண் கல்வி குறித்து கோஷமிட்டு சென்றனர். உடன் ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.

Similar News