ஆரணி வடக்கு , தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்.
ஆரணி அடுத்த நெசல் கிராமத்தில் வடக்கு, தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.;

ஆரணி, ஆரணி அடுத்த நெசல் கிராமத்தில் வடக்கு, தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆரணி தொகுதி பொறுப்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன் தலைமை தாங்கினார். அனைவரையும் ஒன்றியசெயலாளர் எம்.சுந்தர் வரவேற்றார். ஆரணி நகரமன்றதலைவர் ஏ.சி.மணி, மாவட்டதுணைசெயலாளர் ஜெயராணிரவி, ஒன்றியசெயலாளர்கள் துரை.மாமது, எஸ்.மோகன், ன்னாள் ஒன்றியக்கழுத்தலைவர் கனிமொழிசுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம் பொதுக்கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். தலைமைக்கழக பேச்சாளர்கள் அத்திப்பட்டு சாம்ராஜ், தக்கோலம் தேவபாலன், தமிழ்கொண்டான் ஆகியோர் கலந்து கொண்டு திமுக ஆட்சியின் சாதனைகளையும், அவதூறு பரப்பும் அதிமுகவை கண்டித்தும் பேசினர்.முடிவி்ல் கிளை அவைத்தலைவர் டி.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.