
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஆதரவற்ற பெண்களுக்கு, 50 சதவீத மானியத்தில் நாட்டின கோழிக்குஞ்சிகள் வழங்கப்பட்டது. கால்நடை பராமரிப்பு துறை சார்பில், ஏழ்மை நிலையில் உள்ள, கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு, 50 சதவீத மானியத்தில், 40 நாட்டினக் கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குரால், அனுமனந்தல், தொட்டியம், அம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில், 83 பயனாளிளுக்கு கோழிகுஞ்சுகள் நேற்று வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கால்நடைப் பராமரிப்பு துறை உதவி இயக்குனர் கந்தசாமி மற்றும் கால்நடை டாக்டர்கள் பங் கேற்றனர். இதேபோல மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், உளுந்துார் பேட்டை, திருக்கோவிலுார், கல்வராயன்மலை, திருநாவலுார், தியாகதுருகம், சின்னசேலம், சங்கராபுரம் ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா, 100 வீதம் மொத்தம் 900 பயனாளிளுக்கு, கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட உள்ளது.