தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள், ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்உதகை வர உள்ள நிலையில் மு. பெ சாமிநாதன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்;
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்து (05.04.2025 மற்றும் 06.04.2025) உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, உதகை அரசு கலை கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முன்னிட்டு, இன்று (21-03-2025) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள், முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள், உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ், நகர மன்ற துணைத் தலைவர்கள் ரவிக்குமார் (உதகை) வாசிம் ராஜா (குன்னூர் ), திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடன் உள்ளனர்.