நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு கிடங்கானது காலாண்டு ஆய்விற்காக மாவட்ட தேர்தல் அலுவலர் முன்னிலையில் திறக்கப்பட்டது
மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் ஆய்வு மேற்கொண்டனர்;
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு கிடங்கானது காலாண்டு ஆய்விற்காக மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் முன்னிலையில் இன்று திறக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் இருப்பு நிலை குறித்தும், சிசிடிவி கேமராக்களின் செயல் நிலை மற்றும் இதர பாதுகாப்பு நிலைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உடன் வாக்காளர் பதிவு அலுவலர் / உதகை வருவாய் கோட்டாட்சியர் .சதீஷ், தனி வட்டாட்சியர் (தேர்தல்கள்) ஸ்ரீநிவாசன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் உள்ளனர்.