பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வழியில்

தனது இல்லத்தில் கருப்பு கொடியை ஏற்றி வைத்த ஒன்றிய தலைவர்;

Update: 2025-03-22 06:14 GMT
தமிழ் மக்களையும், விவசாயிகளையும், ஊழல் நிறைந்த திராவிட அரசிடம் இருந்து மீட்போம். தமிழகம் காப்போம் என பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை அறைக்கூவல் விடுத்தார். அவரது வழியில், பாஜகவினர் பலரும், தங்கள் இல்லத்தில் கருப்புக் கொடியை ஏற்றி வைத்து, திமுக அரசுக்கு எதிராக தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். அதுபோன்று, நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியை சேர்ந்த பாஜக ஒன்றிய தலைவர் ஆர்.நிஜந்தன், தனது இல்லத்தில் கருப்புக் கொடியை ஏற்றி வைத்து, திமுக அரசுக்கு எதிராக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News