பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்கல்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்கும் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்;
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்கும் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் நலன் கருதி மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் ஓஆர்எஸ் எனப்படும் உப்பு-சர்க்கரை கலவை கரைசல் வழங்கும் நிகழ்வினை அண்ணா பேருந்து நிலையத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், மண்டல தலைவர் கலைசெல்வி, பகுதி செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.