நண்பன் கொலை : மோப்ப நாய் உதவியுடன் கொலையாளி கைது

திருவாலங்காடு லோகேஷ் என்ற மாணவனை அவரது நண்பர் ஜெகன் கொடூரமான முறையில் கத்தியில் வெட்டி குடிபோதையில் கொலை செய்துள்ளார் ஜெகனுக்கு காவல்துறையினர் பாத்ரூம் டிரீட்மென்ட் வழங்கியுள்ளனர்.;

Update: 2025-03-22 08:39 GMT
திருவாலங்காடு லோகேஷ் என்ற மாணவனை அவரது நண்பர் ஜெகன் கொடூரமான முறையில் கத்தியில் வெட்டி குடிபோதையில் கொலை செய்துள்ளார் ஜெகனுக்கு காவல்துறையினர் பாத்ரூம் டிரீட்மென்ட் வழங்கியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவாலங்காடு ஒன்றியம் அருகிலுள்ள நார்த்தவாடா கிராமத்தில் நேற்று பூண்டியைச் சேர்ந்த லோகேஷ் என்ற 19 வயது மாணவனை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்து அந்த பகுதியில் வீசி சென்ற மர்ம நபர் யார் என்று மோப்பநாய்- கைரேகை நிபுணர்கள் துணையுடன் திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் இந்த வழக்கில் குற்றவாளியை விரைந்து பிடிக்க திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் துரித நடவடிக்கை மேற்கொண்டார் அதற்கான தனிப்படைகளையும் அமைத்தார் இறந்து போன லோகேஷ் செல்ஃபோன் கடைசி உரையாடல்கள் போன்றவற்றுடன் துரித விசாரணை தனிப்படை போலீசார் மேற்கொண்டதில் பூண்டி கிராமத்தில் இருந்த சொந்த வீட்டில் இருந்த லோகேஷ் மாணவனை செல்போனில் தொடர்பு கொண்டு மது அருந்துவதற்கு அழைத்துள்ளார் அவரது நண்பர் நார்த்தவாடா கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் இருவரும் இரு சக்கர வாகனத்தில் பூண்டியில் இருந்து புறப்பட்டு வந்து ஜெகன் சொந்த ஊரில் ஊருக்கு யாரும் இல்லாத ஜெகன் வீட்டின் பின்புறம் உள்ள பகுதியில் அமர்ந்து இருவரும் மதுபானம் அருந்தியுள்ளனர் அப்போது மதுபானம் சாப்பிட்டுவிட்டு இருவருக்கும் ஜெகன் தரவேண்டிய ரூபாய் ஆயிரம் ரூபாய் பணம் குறித்து தகராறு நண்பர்களுக்கு இடயே வாய் தகராறு ஏற்பட்டு கொலை செய்துள்ளார் ஜெகன் என்று கூறப்படுகிறது இதில் லோகேஷ் கொடூரமான முறையில் கத்தியில் கொலை செய்து விட்டு அங்கிருந்து அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்று எதுவும் தெரியாதது போல் மறைந்துள்ளார் இருந்துள்ளார் ஜெகன் போலீசார் நடத்திய விசாரணையில் செல்போன் சோதனை செய்து விசாரணையில் சிக்கிக்கொண்ட ஜெகன் நண்பனை கொலை செய்த குற்றத்திற்காக திருவாலங்காடு காவல் நிலையம் அழைத்து வந்து பாத்ரூம் டிரீட்மென்ட் கொடுத்து ஜெகன் தான் கொலை செய்தான் என்று போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் எதற்காக கொலை நடந்தது வேறு எதுவும் காரணமா என்றும் தற்போது விசாரணை போலீசார் கூறவில்லை மேலும் கொடூரமான முறையில் நண்பனை கொலை செய்த கொலையாளியை 24 மணி நேரத்தில் கொலையாளியை கண்டுபிடித்தாலும் ரூபாய் ஆயிரம் ரூபாய் பணம் மது போதை கொலை நடந்ததாக போலீஸ் கூறுவது நம்பும்படியாக இல்லை என்று புறப்படுகிறது என்று கொலை செய்யப்பட்ட லோகேஷ் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News