கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் உருவ பொம்மையை எரிக்க முயன்ற

காவிரி தமிழ் தேசிய விவசாயிகள் சங்கத்தினர் கைது;

Update: 2025-03-22 09:46 GMT
கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், பாராளுமன்ற தொகுதி வரையறை சம்பந்தமாக சென்னையில் நடைபெற்ற கூட்டத்திற்கு வந்தார். அப்போது, கர்நாடகத்தில் மேகதாது அணைக்கட்டு கட்ட கர்நாடகா அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது என கூறினார். இதனால்  ஆத்திரமடைந்த, வேதாரண்யம் காவிரி தமிழ் தேசிய விவசாயிகள் சங்கத்தினர், வேதாரண்யம்- நாகப்பட்டினம் சாலையில், துணை முதல்வர் சிவகுமாரின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது, வேதாரண்யம் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான போலீசார், விவசாயிகளை தடுத்தனர். இதனால், சிவகுமாரின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற விவசாயிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், உருவ பொம்மையை போலீசார் வலுக்கட்டாயமாக பறித்தனர். துணை முதல்வர் சிவகுமாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த சுப்பிரமணியன், சிவகுமார் உள்ளிட்ட காவிரி தமிழ் தேசிய விவசாயிகள் சங்கத்தினரை  போலீசார் கைது செய்தனர். இது குறித்து, வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேதாரண்யம்- நாகப்பட்டினம் சாலை முகப்பில்  50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News