சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 28). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் கடந்த 13-ந்தேதி வேலையை முடித்து விட்டு பாரப்பட்டியில் உள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது பூலாவரியில் இருந்து மல்லூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக எதிரே வந்த ஆட்டோவில் மோதி படுகாயம் அடைந்தார். பின்னர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட மயில்சாமி அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.