கீழையூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில்

விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி;

Update: 2025-03-23 08:32 GMT
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த போது, இந்தியாவிற்கு விடுதலை வேண்டும் என்று இந்தியாவில் இளைஞர்கள் போராடினர். இந்த காலகட்டத்தில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவில் உள்ள தொழிலாளர்களுக்கு விரோதமாக சட்டத்தை பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முன்வந்தபோது, அதை தடுக்கும் நோக்கத்தில், பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரும் அனுமதி பெற்று உள்ளே சென்று அந்த சட்டத்தை பிரிட்டிஷ் பிரதமர் முன்மொழிந்த போது, யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் ஒலியை மட்டுமே எழுப்பக்கூடிய குண்டு- ஐ நாடாளுமன்றத்தில் வீசி, கையில் இருந்த பிரிட்டிஷ் அரசே நாட்டை விட்டு வெளியேறு. இந்தியாவை சுதந்திரமாக செயல்படவிடு என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதனால், மூவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் 1931 -ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி தூக்கிலிடப்பட்டனர். இதன் எதிரொலியாக, நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் வெகுண்டு எழுந்து, சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பின டி.செல்வம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளரும், சிபிஐ மாவட்டத் துணைச் செயலாளரான கே.பாஸ்கர், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் கௌசல்யா இளம்பரிதி ஆகியோர் கலந்து கொண்டு, விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். நிகழ்ச்சியில், சிபிஐ கட்சி மாவட்ட குழு உறுப்பினர் வீ.சுப்ரமணியன், ஒன்றிய துணை செயலாளர் வீ.எஸ்.மாசேத்துங், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ஜி.சங்கர், அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தின் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ரமேஷ், இலக்கிய பெருமன்றத்தின் பொறுப்பாளர் ஏ.ஆர்.கணபதி சுந்தரம், நிலைச் செயலாளர்கள் எட்டுக்குடி ஜெயராமன், ஈசனூர் பீட்டர் ராஜ், திருத்துறைப்பூண்டி வீ.ராஜ்மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஒன்றிய பொருளாளர் எம்.பர்ணபாஸ்‌ நன்றி கூறினார்.

Similar News