சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது!
விளாத்திகுளம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்;
விளாத்திகுளம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் வாலசமுத்திரம் பகுதி சேர்ந்த பொன்னையா மகன் முருகன் (60). இவர் அப்பகுதியில் உள்ள 13 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக சைகை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார், இதனை அடுத்து அந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.