நாசரேத்தில் கம்பியால் கட்டப்பட்ட மின்கம்பம் அகற்றம் : மின்வாரியம் அதிரடி!
நாசரேத்தில் கட்டுக் கம்பியால் கட்டப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பம் அதிரடியாக மாற்றப்பட்டு புதிய மின் கம்பம் நாட்டப்பட்டது.;
நாசரேத்தில் கட்டுக் கம்பியால் கட்டப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பம் அதிரடியாக மாற்றப்பட்டு புதிய மின் கம்பம் நாட்டப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் 2வது தெருவான களஞ்சியம் தெரு பிரதான சாலையில் மிகவும் ஆபத்தான நிலையில் கம்பியால் கட்டப்பட்ட மின்கம்பம் இருந்தது. இப் பகுதியில் பிரசித்தி பெற்ற யோவான் பேராலயம், தபால் நிலையம், மெட்ரிகுலேஷன் பள்ளி, துவக்கப் பள்ளி ஆகியவற்றிற்கு இந்த சாலை வழியாக செல்லும் மாணவ, மாணவிகள், சிறு வியாபாரிகள் என பல்வேறு தரப்பட்ட மக்களும் இந்த ஆபத்தான மின்கம்பத்தை கடந்து செல்கின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி நாசரேத் மின்வாரியம் உடனடியாக மின் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக அதிரடியாக பழைய கம்பியால் கட்டப்பட்ட மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பத்தை நாட்டினர். புதிய மின் கம்பம் மாற்றப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.