யோகா, தியான பயிற்சி முகாம்

கண்ணமங்கலம் புதுப்பேட்டை யோகா தியான பயிற்சி மையத்தில் தமிழ்நாடு வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நாராயணன் யோகா தியான பயிற்சி அளித்தார்.;

Update: 2025-03-23 17:43 GMT
யோகா, தியான பயிற்சி முகாம்
  • whatsapp icon
ஆரணி, ஆரணி அடுத்த கண்ணமங்கலம் ஹார்ட்புல்னெஸ் யோகா தியான பயிற்சி மையத்தில் யோகா, தியான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு பணிநிறைவு தலைமையாசிரியர் பி.சி.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பேரூராட்சி இளைநிலை உதவியாளர் ரஞ்சித்குமார், முன்னாள் தலைமையாசிரியர் கே.எம்.குமார், ஆசிரியர் சதீஷ் முன்னிலை வகித்தனர். மேலாளர் தமயந்தி வரவேற்றார். தமிழ்நாடு வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, உடல் ஆரோக்கியத்திற்கு யோகாவும், உள்ள ஆரோக்கியத்திற்கு தியானமும் உதவியாக இருக்கிறது. அனைவரும் யோகாவும், தியானமும் செய்து பயன்பெற வேண்டும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து அனைவருக்கும் செயல்முறை பயிற்சி அளித்தார். இந்த ஹார்ட்புல்னெஸ் யோகா தியான பயிற்சி முகாம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், தொடர்ந்து செய்யும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் முகாமில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். முடிவில் கல்லூரி மாணவி இந்துமதி நன்றி கூறினார்.

Similar News