கருமாரியம்மன் மண்டலாபிஷேக விழா

வெள்ளூர் குஜால்பேட்டை கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்.;

Update: 2025-03-23 17:47 GMT
  • whatsapp icon
ஆரணி சந்தவாசல் அடுத்த வெள்ளூர் குஜால்பேட்டை கருமாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. கடந்த பிப்ரவரி 3ம் தேதி குஜால்பேட்டையில் புதியதாக கட்டப்பட்ட கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதனை தொடர்ந்து கடந்த 48நாட்களாக தினசரி பூஜைகள் நடந்து வந்தன. 48ம் நாள் மண்டலாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி கோயில் வளாகத்தில் யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் யாகசாலையிலிருந்து புனிதநீர் எடுத்து செல்லப்பட்டு மூலவர் மீது ஊற்றி மண்டலாபிஷேக பூஜை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர.

Similar News