பட்டப்பகலில் கார் கண்ணாடியை அடித்து உடைத்து திருடும் கும்பல்: பொதுமக்கள் அச்சம்

பட்டப்பகலில் கார் கண்ணாடியை அடித்து உடைத்து திருடும் கும்பல் பொதுமக்கள் அச்சம்;

Update: 2025-03-24 04:09 GMT
சென்னை புழல் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் அரசு ஊழியர் காரில் பட்டப் பகலில் கார் கண்ணாடியை உடைத்து 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் செல்லக்கூடிய சிசிடிவி காட்சிகள் பட்டப்பகலில் கார் கண்ணாடியை அடித்து உடைத்து திருடும் கும்பல் பொதுமக்கள் அச்சம் சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் செந்தில்நாதன் இவர் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார் இவர் தனது கிராமத்தில் ஆடுகள் வளர்த்து அதை மாதவரம் ஆட்டு சந்தையில் விற்பனை செய்து வருவதும் வழக்கமாகக் கொண்டுள்ளார் இந்நிலையில் இன்று காலை தனது ஆடுகளை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனங்களில் பின் தொடர்ந்து அவரது காரில் மாதவரம் அருகே அமைந்துள்ள ஆட்டுசந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்துவிட்டு ரூபாய் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் தனது காரில் வைத்துக் கொண்டு எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்கு அருகில் காரை நிறுத்திவிட்டு சென்று உள்ளார் அப்பொழுது திடீரென கண்ணாடி உடையும் சத்தம் கேட்டுள்ளது சத்தம் கேட்டு ஜன்னல் வழியாக பார்த்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் செந்தில் நாதனின் கார் கண்ணாடி உடைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தில்நாதன் சத்தம் போட்டுக்கொண்டு கீழே ஓடி வந்துள்ளார் செந்தில்நாதன் கீழே வருவதற்குள் மரும நபர்கள் காரில் இருந்த ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை பணத்தை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றுள்ளனர் இதனை அடுத்து சென்னை புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்க நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பட்ட பகலில் ஆள் நடமாட்டம் உள்ள நேரத்தில் கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News