பழங்குடியினர் திருவிழா கோலாகலம்

சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் கண்டு ரசிப்பு;

Update: 2025-03-24 04:18 GMT
தோடர் பழங்குடியின மக்களின் மொர்பர்த் பண்டிகை உதகை கார்டன் மந்து பகுதியில் தோடர் பழங்குடியின திருவிழா கோலாகலம் . நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு தோடர் பழங்குடியின மக்கள் மந்துகளில் வசித்து வருகின்றனர். மஞ்சகல் மந்து என்கிற மந்தில் தோடர்களின் பாரம்பரிய திருவிழா மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது. இவர்கள் பாரம்பரிய முறைப்படி இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து கோவிலை வடிவமைக்கின்றனர். அவ்வாறாக மூதாதையர் காலத்தில் இருந்து வழிபாடு செய்யப்பட்டு வரும் கோவில் சமீபதினங்களுக்கு முன்பு புனரமைக்கப்பட்டு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது அனைத்து மந்துகளில் இருந்தும் அனைவரும் வருகை புரிவார்கள். அனைத்து கிளேன்களில் இருந்தும் அனைவரும் வருகை புரிந்து உடன் பூசாரி கோவிலின் பாரம்பரிய சடங்கு முறைகளை செய்து வழிபாடு செய்ய தொடங்குகின்றனர். வழிபாடு செய்யப்பட்ட பிறகு இவர்களது பாரம்பரிய நடனம் நிகழ்த்தப்படுகிறது. மேலும் ஆண்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாரம்பரிய இசை பாடி நடனமாடி மகிழ்கின்றனர். அதன் பிறகு இறுதியாக அனைவருக்கும் அன்னதானம் அவர்களுடைய பாரம்பரிய முறைப்படி பால் சோறு மற்றும் நெய் ஆகியவை வழங்கப்பட்டு திருவிழாவை நிறைவு செய்கின்றனர். பாரம்பரிய மாறாமல் இன்றளவும் பாரம்பரிய முறைப்படி பின்பற்றப்பட்டு வரும் இவர்களது திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர்.

Similar News