மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் வாயில் கருப்பு துணி கட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு
நூதனப் போராட்டம் செய்த வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள்;
மோட்டார் வாகனம் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் வாயில் கருப்பு துணி கட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு தங்களுக்கு தனியாக ஒரு இடத்தை அமைத்து தர வேண்டும் தங்கள் வாழ்வாதாரமே மோட்டார் வாகன பழுது பார்க்கும் ஒர்க்ஷாப் தான் என கூறி வாயில் கருப்பு துணி அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது இதில் நீலகிரி மாவட்ட மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் இந்த மனுவில்கடந்த 2023-ம் ஆண்டு தொடக்கம் முதல் இந்த வர்க்ஷாப்பிற்கு தனி இடம் கேட்டு விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியரிடமும், நகராட்சி ஆணையரிடமும் மாவட்ட தொழில் மைய அலுவலர்களிடம் தொடர்ந்து இதுவரை கொடுத்து வருகின்றோம். அந்த மனுவை விசாரித்து விட்டு எங்களுக்கு எந்த ஒரு பதிலை சொல்லாமலும் தங்கள்நிலைமையை உணராமல் இருக்கின்றனர் எனவும் .இந்த மனுவை பார்த்து தங்கள் எங்களுடைய நிலைமைகளை விசாரித்து எங்கள் குறைகள் மற்றும் வாழ்வதாரம் எங்கள் நிலை அனைத்தையும் உணர்ந்து இதற்கு ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாயில் கருப்பு துணி கட்டி மனு அளித்தனர்