ஆஷா ஊழியர்கள் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் கைது;

Update: 2025-03-24 09:38 GMT
காவல் துறையினருக்கும் ஆஷா ஊழியர்களுக்கும் தள்ளுமுள்ளு .. ஆஷா ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ... ஆஷா ஊழியர்கள் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் உதகை ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் ஊழியர்களை நிரந்தரம் செய்து குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 26,000 நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் 10 வருடம் பணி முடித்த ஆஷா ஊழியர்களுக்கு சுகாதார செவிலியர் பணி வழங்கிட வேண்டும் எனவும் இரண்டு மணி நேரம் வேலை என அறிவித்து விட்டு 24 மணி நேரமும் வேலை வாங்குவதை கைவிட வேண்டும் என பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இட சென்ற ஆஷா ஊழியர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆஷா ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது .

Similar News