அதிமுக சார்பில் இப்தார் விருந்து!

தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி சார்பில் சார்பில் இப்தார் விருந்து ஏராளமான இந்து கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என கலந்துகொண்டு நோன்பு திறந்தனர்;

Update: 2025-03-24 15:36 GMT
தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி சார்பில் சார்பில் இப்தார் விருந்து ஏராளமான இந்து கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என கலந்துகொண்டு நோன்பு திறந்தனர் இஸ்லாமியர்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான். கடந்த 2ம்தேதி இஸ்லாமிய மக்கள் நோன்பு துவங்கி வரும் 31ம்தேதி வரை அதாவது 30நாட்கள் நோன்பு கடைப்பிடிப்பார்கள். இஸ்லாமியர்கள் நோன்பு சூரிய உதயத்துக்கு முன்பிருந்து, சூரியன் மறையும் நேரம் வரை, உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல், நோன்பு கடைப்பிடித்து மாலை நோன்பு திறப்பது வழக்கம். தூத்துக்குடி மாநகர மத்திய வடக்கு பகுதி சார்பில் அதிமுக சார்பில் ரமலான் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நவசாத் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ் பி சண்முகநாதன் கலந்துகொண்டு நோன்பு திறந்து வைத்தார். இதில் மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாநில வழக்கறிஞர் செங்குட்டுவன், முன்னாள் மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் சுதாகர், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட இளம் பெண் பாசறை பொருளாளர் புல்லட் பரிபூரண, ராஜா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன், வழக்கறிஞர் முனியசாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்க தலைவர் நிலா சந்திரன், சிறுபான்மை பிரிவு இம்ரான்,; உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமியர்கள் இந்து கிறிஸ்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நோன்பு திறந்தனர் பின்னர் உலக நன்மைக்காக சிறப்புத் தொழுகை நடைபெற்றது

Similar News