அடையாளம் தெரியாத வாகனம் ஓதியது ஒருவர் உயிரிழப்பு!

விபத்து செய்திகள்;

Update: 2025-03-25 03:14 GMT
கீரனூர் அருகே தென்திறையான் பட்டியை சேர்ந்தவர் இளையராஜா (30) கீரனூர் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று அதிகாலை புதுக்கோட்டையிலிருந்து கீரனூர் நோக்கி பைக்கில் சென்றார் .மேலூர் அருகே சென்ற போது திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த இளையராஜா அதே இடத்தில் உயிரிழந்தார் இது குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன.

Similar News