அறந்தாங்கி சிவகாசிக்கு பஸ் சேவை அமைச்சரிடம் எம்எல்ஏ கோரிக்கை!

பொது பிரச்சனை;

Update: 2025-03-25 03:21 GMT
அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராமச்சந்திரன் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் அறந்தாங்கி நகரில் ஏராளமான அச்சகங்கள் உள்ளன. இந்த அச்சகங்கள் மூலம் அழைப்பிதழ்கள் நோட்டீசுகள் அச்சிடப்பட்டாலும் நவீன தொழில்நுட்பத்துடன் குறைந்து செலவில் அச்சு வேலைகளை செய்ய சிவகாசி நகருக்கு செல்ல வேண்டி உள்ளது.அந்த வகையில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வியாபாரிகள் சிவகாசி சென்று வருகின்றனர். இவர்கள் காரைக்குடி அல்லது மதுரைக்கு சென்ற அங்கிருந்து வேறு பஸ் மூலம் பயணிக்க வேண்டியுள்ள நிலை உள்ளது. இதை தவிர்க்க அறந்தாங்கியில் இருந்து சிவகாசிக்கு தினமும் நேரடி பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.

Similar News