புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த பொற்செல்வி என்ற பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். காதல் கணவன் கைவிட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்த நிலையில் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.