மத்திய அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு

தமிழகத்தில் நிதி நெருக்கடியை உருவாக்க மத்திய அரசு முயற்சி: அமைச்சா் குற்றச்சாட்டு;

Update: 2025-03-25 05:36 GMT
திமுக அரசின் நலத்திட்டங்களை சகிக்க முடியாமல் தமிழகத்தில் நிதி நெருக்கடியை உருவாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது என அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பேசினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில், மத்திய அரசை கண்டித்து ஆத்தூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மீன்வளம், மீனவா் நலன்-கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தமிழக மக்கள் சமச்சீராக வாழ வேண்டும் என்பதற்காக பல்வேறு நலத்திட்டகளை முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். இதை சகிக்க முடியாமல், தமிழகத்துக்கு தர வேண்டிய கல்வி நிதி, 100நாள் வேலைத்திட்ட நிதி, பேரிடா் நிவாரண நிதி போன்றவற்றை தராமல் மத்திய ஆட்சியாளா்கள் நிதி இழப்பை ஏற்படுத்தி வருகின்றனா். மேலும், மதப் பிரிவினைகளை உருவாக்கி அரசியல் செய்கின்றனா். தென் மாநிலங்களில் எம்பி தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து, வடமாநிலங்களில் அதிகரிக்கும் வகையில் தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த விஷயத்தில் முதல்வா் எடுக்கிற நடவடிக்கைகளுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.

Similar News