சிறுபான்மையினர் இல்லாத நிலை உருவாக்க மத்திய அரசு முயற்சி : அமைச்சர் கீதா ஜீவன்

சிறுபான்மையினர் இல்லாத நிலை உருவாக்க வேண்டும் என்று மத்தியில் இருக்கக்கூடிய பாஜக அரசு முயற்சித்து வருகிறது என அமைச்சர் கீதா ஜீவன் கலந்து பேசினார்.;

Update: 2025-03-25 05:45 GMT
தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மற்றும் தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு இணைந்து பல சமயத்தவர்களும் பங்கேற்கும் சமூக நல்லிணக்க இஸ்லாமியர்கள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு மாவட்ட தலைவர் செய்த அலி தலைமை வகித்தார். காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ்.முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டு மத நல்லிணக்க இஃப்தார் நோன்பு துவக்கி வைத்து பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கி பின்னர் அமைச்சர் பேசுகையில்: அவர்கள் செய்யக்கூடிய தியாகத்தை யாருக்காவது ஏழை எளிய தேவை உள்ளவர்களுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யவும், அவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று ரமலான் பண்டிகையில் ஒரு பகுதியாக இஸ்லாமிய சமுதாயத்தினர் செய்து வருவது அறிந்தது. இந்திய அரசின் அமைப்பின் சட்டத்தின் கீழ் பெரும்பான்மையினர் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தான் வழங்கப்பட்டிருக்கிறது அந்த ஒரு அரசமைப்பு சட்டத்தின் உரிமையை கூட இன்று எடுத்து விட வேண்டும், நசுக்கி விட வேண்டும் சிறுபான்மையினர் இல்லாத நிலை உருவாக்க வேண்டும் என்றெல்லாம் மத்தியில் இருக்கக்கூடிய ஒன்றிய பாஜக அரசு முயற்சித்து வருகிறார்கள் அதை நோக்கி பயணித்து வருகிறார்கள். ஒற்றுமையே பலம் என்று மனதில் வைத்து அனைவரும் என்றும் சகோதரத்தோடு ஒற்றுமையோடு ஒருவருக்கொருவர் பழகுவோம் என்று கூறி ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இந்த நிகழ்ச்சியில் நற்செய்தி நடும் இயக்குனர் அருட்திரு. பென்சிகர் லூசன், அய்யா வழி கிருஷ்ணவேணி கணேசன், ராஜலட்சுமி, கிதர் பிஸ்மி, சம்சுதீன், ஷாஜகான் மற்றும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News