தமிழக வெற்றிக்கழகத்தினர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

தூத்துக்குடி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் அபாயகரமான பள்ளங்கள் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஆகிறது ஆகையினால் சீர் செய்யக்கோரி தமிழக வெற்றிக்கழகத்தினர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை;

Update: 2025-03-25 08:11 GMT
தமிழக வெற்றிக்கழகத்தினர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
  • whatsapp icon
தூத்துக்குடி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் அபாயகரமான பள்ளங்கள் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஆகிறது ஆகையினால் சீர் செய்யக்கோரி தமிழக வெற்றிக்கழகத்தினர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை 24 மணி நேரமும் கனராக வாகனங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லக்கூடிய சாலையாக இருந்து வருகிறது. மேலும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் இங்கு சாலை பயன்படுத்தி தான் கோவிலுக்கு செல்கின்றனர். மேலும் இச்சாலையில் முத்தையாபுரம் பகுதியில் இருந்து முள்ளக்காடு பகுதி வரையில் உள்ள சாலையானது மிகவும் மோசமான முறையில் அபாயகரமான பள்ளங்களுடன் விபத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு முத்தையாபுரம் அருகில் சாலையின் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி பெண் செவிலியர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாலையின் நடுவே கால்நடைகள் நின்று கொண்டு இருப்பதால் சாலையில் வரக்கூடிய வாகனங்களும் கால்நடைகள் மீது மோதி பயங்கரமான விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதி மக்களுக்கு இடையே மிகுந்த அச்சம் ஏற்படுத்தி உள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு அந்தப் பகுதியில் விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில் தரமான சாலை அமைக்க வலியுறுத்தி தமிழக வெற்றிக்கழக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் அக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நேரில் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Similar News