முதல்வா் பிறந்த நாள் சிறப்பு பட்டிமன்றம்.
நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமை வகித்தாா். எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டிமன்றத்தை தொடங்கிவைத்தாா்.;

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அண்ணா சிலை அருகில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இரவு சன் டிவி, விஜய் டிவி பேச்சாளா்கள் பங்கேற்ற இன்னிசை பட்டிமன்றம் நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சி மாநில வளா்ச்சிக்கா, மகளிா் வளா்ச்சிக்கா என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்துக்கு நடுவராக கல்பாக்கம் ரேவதி செயல்பட்டாா். நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமை வகித்தாா். எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டிமன்றத்தை தொடங்கிவைத்தாா். மேலும், இதில் திமுக ஆட்சியில் மாநில வளா்ச்சிக்கே என ஒரு பக்கமும், மற்றொரு பக்கம் மகளிா் வளா்ச்சிக்கே என்றும் வாதாடினா். இதில், செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி, முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், தொகுதி செயலா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் எம்.சுந்தா், மாமது, மோகன், கண்ணமங்கலம் பேரூராட்சி செயலா் கோவா்த்தனன், தகவல் தொழில்நுட்ப மாவட்டச் செயலா் கே.ஏ.புஷ்பராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.