பென்னாகரம் தொகுதியில் இருவர் மாயம் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை

பெரியதும்மக்கல் கிராமத்தைச் சேர்ந்த இருவர் மாயம் காவலர்கள் விசாரணை;

Update: 2025-03-26 09:06 GMT
  • whatsapp icon
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பெரியதும்முக்கல் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி வயது 25, இவருக்கு வசந்தி என்ற மனைவியும் மற்றும் மூன்று மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த, மார்ச் 23 அன்று முதல் பெரியசாமி மாயமானார். இதனை அடுத்து அவரது மனைவி வசந்தி இன்று பென்னாகரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பென்னாகரம் காவலர்கள் விசாரிக்கின்றனர். அதேபோல் தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஆரல்குந்தி கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி பிரியா, வயது 28, இந்த தம்பதிக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், கடந்த, 4 நாட்களுக்கு முன்பு அன்று பிரியா மாயமானார். இதனை எடுத்த அவரது கணவர் கண்ணன் அளித்த புகார் படி ஏரியூர் காவலர்கள் விசாரிக்கின்றனர்.

Similar News