ராமேஸ்வரம் முதல் காசிவரை ஆன்மீக சுற்றுலா

இந்து சமய அறநிலைய துறை அலுவலகத்தில் இருந்து மூத்த குடிமக்களை ராமேஸ்வரம் முதல் காசிவரை ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி;

Update: 2025-03-25 12:32 GMT
ராமேஸ்வரம் முதல் காசிவரை ஆன்மீக சுற்றுலா
  • whatsapp icon
இந்து மத மக்களின் இன்றியமையாத இறை நம்பிக்கையான ராமேஸ்வரம் முதல் காசி வரை ஆன்மீக பயணம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தினை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக மூத்த குடிமக்களை ராமேஸ்வரம் முதல் காசி வரை ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்ல தமிழ்நாடு சட்டமன்ற அறிவிப்பு வெளியிட்டார் 2024-25படி இந்து சமய அறநிலையத்துறை சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அறிவிப்பு எண் 23 அரசாணையை சட்டமன்றத்தில் வெளியிட்டார். இந்த ஆண்டு மூன்று அணிகள் ஆன்மீக சுற்றுலா சென்று வந்த நிலையில் இதனை தொடர்ந்து இன்று (25 3.2025) திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மதுரை, திண்டுக்கல், கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 20 மூத்த குடி மக்களை இணை ஆணையாளர் கார்த்திக் தலைமையில் உதவி ஆணையாளர் லட்சுமிமாலா பக்தர்களை ராமேஸ்வரம் முதல் காசி ஆன்மீக சுற்றுலா யாத்திரைக்கு அனுப்பி வைத்தனர். இன்று 25.03.2025 துவங்கிய இந்த ஆன்மீக சுற்றுலா பயணம் வரும் இரண்டாம் தேதியுடன் நிறைவடைகிறது. 2024-25 ஆம் ஆண்டிற்கான ஆன்மீக சுற்றுலாவிற்கு சுமார் 420 மூத்த குடிமக்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்காக ஆகும் செலவான 1.05 கோடி ரூபாயை தமிழக அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

Similar News