அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் சார்பில் இப்தார் விருந்து!
தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் சார்பில் இப்தார் விருந்து ஏராளமான இந்து கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என கலந்துகொண்டு நோன்பு திறந்தனர்;
தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் சார்பில் சார்பில் இப்தார் விருந்து ஏராளமான இந்து கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என கலந்துகொண்டு நோன்பு திறந்தனர் இஸ்லாமியர்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான். கடந்த 2ம்தேதி இஸ்லாமிய மக்கள் நோன்பு துவங்கி வரும் 31ம்தேதி வரை அதாவது 30நாட்கள் நோன்பு கடைப்பிடிப்பார்கள். இஸ்லாமியர்கள் நோன்பு சூரிய உதயத்துக்கு முன்பிருந்து, சூரியன் மறையும் நேரம் வரை, உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல், நோன்பு கடைப்பிடித்து மாலை நோன்பு திறப்பது வழக்கம். தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் சார்பில் ரமலான் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் மீராசா தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு காஜி முஜிபுர் ரகுமான், ஜாமிஆ பள்ளிவாசலில் தலைமை இமாம் அப்துல் அழிம் ஆகியோர் கலந்துகொண்டு நோன்பு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜாமியா பள்ளிவாசல் செயலாளர் எம் எஸ் எப் ரகுமான், அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க தலைவர் சங்கர் மாரிமுத்து, பொதுச்செயலாளர் சுரேஷ்குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.