மகாகவி பாரதியார் இல்லத்தின் மேற்ககூறை இடிந்து விழுந்து சேதம்

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தின் மேற்ககூறை இடிந்து விழுந்து சேதம்;

Update: 2025-03-25 14:54 GMT
  • whatsapp icon
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தனது பாடல்கள் மூலம் சுதந்திர வேட்கையை துண்டிய முண்டாசு கவி மகாகவி பாரதியார் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த இல்லம் இருக்கிறது. இந்த இல்லம் 1973-ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் அரசுடைமையாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டுவருகிறது. இங்கு பாரதியார் பயன்படுத்திய பொருள்கள் மற்றும் அவரது வாழ்கைக் குறிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அங்கு பகுதி நேர நூலகமும் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் பாரதியார் இல்லத்தின் முன்பகுதியில் உள்ள மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர் அவசரமாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு எட்டயபுரம் தாசில்தார் சுபா விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அதுமட்டுமின்றி அப்பகுதியில் பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Similar News