நகை பறிப்பு குற்றவாளியை கைது செய்த சிறப்பு எஸ்ஐ-க்கு பாராட்டு!
நாசரேத்தில் நகை பறிப்பு குற்றவாளியை கைது செய்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் நகை பறிப்பு குற்றவாளியை கைது செய்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கடந்த நாட்களில் நாசரேத் பகுதியில் நடந்த ஆசிரியை செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை தேடும் பணியில் நாசரேத் இன்ஸ்பெக்டர் கங்கை நாத பாண்டியன் தலைமையில் போலீசார் விரைந்து செயல்பட்டனர். அதில் சிறப்பு எஸ்ஐ ஐசக் மகாராஜா நாசரேத்தில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்ட போது தேடப்பட்டு வந்த அசோக் என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தார். அதற்காக சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமார் குற்றவாளியை விரைவில் பிடித்த சிறப்பு எஸ்ஐ ஐசக் மகாராஜாக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.