அரசு பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அரசு பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்;
தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் கருப்பு ஆடை அணிந்து ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். அரசு பணியாளர் சங்க மாநில தலைவி சுகமதி, சாலைப் பணியாளர் சங்க மாநில தலைவர் பெரியாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் பேசியதாவது,தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட நிதி நிலை அறிக்கையில் அரசு பணியாளருடைய எந்த கோரிக்கையும் நிறைவேற்றவில்லை. ஈட்டிய விடுப்பை சரண் செய்து ஊதியம் பெறக்கூடிய முறையை மட்டும் 1.4.2006 முதல் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் மொத்தமாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். என்பது உள்ளிட்ட இரு கோரிக்கைகளுடன் ஏற்கனவே உளள 12 அம்ச கோரிக்கைகளுடன் சேர்த்து மொத்தம் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த கூட்டத்தில் நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.குமார், சீனு, குமார், சக்திவேல், பிரசார செயலாளர் சுகமதி, பெரியசாமி, ஜான்ஜோசப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.