கோவை: SSLC பொதுத்தேர்வு - 39433 மாணவர்கள் பங்கேற்பு !
மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. இந்த தேர்வை கோவை மாவட்டத்தில் 39,433 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 175 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.;

மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை கோவை மாவட்டத்தில் 39,433 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 175 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த 5-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வை 518 அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளை சேர்ந்த 39 ஆயிரத்து 433 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 175 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.