அகற்றப்பட்ட உயர் மின் கோபுரம் மீண்டும் அமைக்க கோரிக்கை
பிக்கன ஊராட்சியில் அகற்றப்பட்ட உயர் மின் கோபுரம் மீண்டும் அமைக்க கோரிக்கை;
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம் பிக்கனஅள்ளி ஊராட்சியில் உள்ள வெள்ளிசந்தை 4 ரோடு ரவுண்டானா பகுதியில் வாகன ஓட்டிகள், பொதுமக்களின் நலன் கருதி முன்னாள் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் சாலை சீரமைப்பு செய்த போது அதிகாரிகள் உயர் மின் கோபுரத்தை அகற்றினர். ஆனால் தற்போது வரை மின் கோபுரத்தை சீரமைக்க வில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக உயர் மின் கோபுரம் மற்றும் கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் மினி தண்ணீர் டேங்குகளை அமைத்து தர வேண்டும் என இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.